போர்வெல்லில் சாயக்கழிவு வெளியேற்றுவதாக புகார்



ஈரோடு, அக். 15-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், குமலன்குட்டை, செல்வம் நகர் மனோகரன் உள்ளிட்ட அப்பகுதியினர் மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு நல்லித்தோட்டம், கணபதி நகர் பகுதியில் சில சாய ஆலைகள், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் பயன்படுத்தாத போர்வெல்களில் வெளியேற்றுகின்றனர். இதனால் இப்பகுதி நிலத்தடி நீரில் சாயக்கழிவு நீர் முற்றிலுமாக கலந்து, போர்வெல்களில் சாயக்கழிவு நீர் வருகிறது. துணி துவைத்து அலசக்கூட பயன்படுத்த முடியவில்லை.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி ஆலைகளின் கழிவு நீர் வெளியேற்றத்தையும், ஆலைகளில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆலைகளை, குடியிருப்பு பகுதிக்கு அப்பால் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement