ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ஈரோடு, அக். 15--
ஈரோடு மாவட்டத்தின் முதல் சுயநிதி மருத்துவக்கல்லுாரியான நந்தா மருத்துவக்கல்லுாரியில், முதலாமாண்டு வகுப்புகள் துவக்க தொடக்க விழா நேற்று நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி பேசினார்.
அவர் பேசுகையில், 'நந்தா மருத்துவ கல்லுாரியானது, 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குளிரூட்டப்பட்ட நுாலகம், காற்றோட்ட வசதி மற்றும் உணவுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதிகள், உடற்கூறுயியல் ஆய்வு கூடங்கள் மற்றும் 4-கே டிஜிட்டல் ஒளியுடன் குளிரூட்டப்பட்ட விரிவுரையாளர் கூடம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது' என்றார். மாணவ, மாணவியருக்கு வெள்ளை நிற கோட் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லுாரி புல முதல்வர் சந்திரபோஸ் வரவேற்றார். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மேற்பார்வையாளர் சுந்திரவேல் நன்றி கூறினார்.

Advertisement