அலை சீற்றம் அதிகம் இருக்கும்; யாரும் கடற்கரைக்கு போகாதீங்க!

1


திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் உட்பட யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும், நேற்றிரவு கனமழை கொட்டியது. இதனால், இன்று (அக்.,15) மாலை முதல் நாளை (அக்.,16) நள்ளிரவு வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.


ஒவ்வொரு அலையும் 18-22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2-2 மீட்டர் உயரம் எழும்பவும் வாய்ப்புள்ளது. கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்.


படகுகள் நிறுத்தி வைப்பு



நாகையில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500க்கும் மேற்பட்ட பைபர் படகுககள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




கடல் சீற்றம்



வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வின் காரணமாக, மயிலாடுதுறையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள 500 விசைப்படகுகள், 4800 பைபர் படகுகள் முகத்துவாரங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement