பள்ளிகள் லீவு! அப்போ ஆன்லைன் க்ளாஸ்? அமைச்சர் சொன்ன தகவல் இதுதான்

8

சென்னை: விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டு உள்ளார்.


@1brதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை விடாது பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.


இந் நிலையில், பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டு உள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;



கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தமது பதிவில் கூறி உள்ளார்.

Advertisement