மெட்ரோ ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு! 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்!

1


சென்னை: கன மழையால் பயணியர் பாதிக்கப்படாமல் இருக்க இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழக்கமானதைவிட கூடுதல் ரயில்கள் இயக்குவதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று(அக்.,15) முதல் வரும் அக்.,17ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் கனமழை காரணமாக 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.


​​42 ரயில்களுக்குப் பதிலாக மொத்தம் 47 ரயில்கள் இன்று (15-10-2024) சேவையில் உள்ளன.


* வண்ணாரப்பேட்டை - ஆலந்துார் வழித்தடத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.


* சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் வழித்தடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்


* விம்கோ நகர்- விமானநிலையம் வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்


பயணிகள் இந்த சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு கொள்ள வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement