ஆரம்பமே அமர்க்களம்; தொடங்கியது வடகிழக்கு பருவமழை!

5

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது என சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.


வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.


இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மழை துவங்கியதுமே தீவிரமடைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை துவங்கியதாக அறிவித்துள்ள வானிலை மையம் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இருந்து முற்றிலும் விலகிவிட்டது எனக்கூறியுள்ளது.

மழை அளவு



சென்னையில் இன்று காலை முதல் பெய்த மழை (மில்லி மீட்டரில்)

இன்று காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணிக்குள், 100 மில்லி மீட்டருக்கு மேல் (10 செ.மீ.,) மழை பதிவான ஊர் விவரம்

கடப்பாக்கம் 276

அவ்வை நகர் 194.4

இடையஞ்சாவடி 186.8

பாலவாக்கம் 172.4

ரெட் ஹில்ஸ் 166.8

கொசப்பூர் 163.2

மஞ்சம்பாக்கம் 127.6

கிண்டி சிப்காட் 125.2

எர்ணாவூர் 125.2

வில்லிவாக்கம் 124.5

திருவொற்றியூர் 120.8

புழல் 120.5

சேலைவாயல் 116.8

அண்ணா பல்கலை 113.5

மாதவரம் 112

நீலாங்கரை 111.6

சாலிகிராமம் 109.6

ஆதம்பாக்கம் 108.8

ஒக்கியம் துரைப்பாக்கம் 104.8

Advertisement