எப்போதும் நான் முன்கள வீரன்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

46


சென்னை: மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், 'தூய்மை பணியாளர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாது கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி என பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.


இந்நிலையில், சென்னை யானைகவுனி பகுதியில் மழைக்கு மத்தியில், மீட்பு பணிகள் மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.


தேநீர், பிஸ்கட் வழங்கினார் ஸ்டாலின்!




சென்னை பெரம்பூர் பகுதியில், மழை வெள்ளப்பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது, அவர் மீட்பு பணிகள் குறித்து தூய்மை பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தேநீரை ஸ்டாலின் வழங்கினார். அவர்களுடன் அவர் பேசி கொண்டே தேநீர் அருந்தினார்.

முன்கள வீரன்!




இது குறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள பதிவில், ' கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement