மஹா., ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நவ.,23ல் ஓட்டு எண்ணிக்கை

40

புதுடில்லி : மஹாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்கண்டில் இரு கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.


288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே பிரிவு), தேசிய வாத காங்கிரஸ்(அஜித் பவார் பிரிவு) கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது.


அதேபோல் 82 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இங்குள்ள 82 தொகுதிகளில் ஒரு இடத்திற்கு நியமன உறுப்பினர் நியமிக்கப்படுவார். 81 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கும்.


இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு, அங்கு தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.


இதன்படி

மஹாராஷ்டிராவில் ஒரே கட்டமாக தேர்தல் நவம்பர் 20 ம் தேதி நடக்கிறது.

ஜார்க்கண்டில் நவ., 13 மற்றும் நவ., 20ம் தேதி என இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இரு மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் நவ.,23ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இடைத்தேர்தல்



எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ராஜினாமா செய்த கேரளா மாநிலம் வயநாடு தொகுதியும் மஹாராஷ்டிராவில் உள்ள நான்டெட் லோக்சபா தொகுதியும் காலியாக உள்ளது. மேலும் உத்தரகண்டில் ஒரு சட்டசபை தொகுதி மற்றும் பல மாநிலங்களில் 47 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன. இதற்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதன்படி வயநாடு லோக்சபா தொகுதி மற்றும் 47 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.,13ம் தேதியும்

உத்தரகண்டில் உள்ள ஒரு சட்டசபை தொகுதி மற்றும் நான்டெட் தொகுதிக்கு நவ.,20ல் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

Advertisement