கடலில் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்; 5 நாள் மீன் பிடிக்க போகாதீங்க; மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை

சென்னை: தமிழக கடல் பகுதியில், அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று மீனவர்களுக்கு, சென்னை மண்டல வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்-15ம் தேதி:

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்-16 முதல் 18ம் தேதி வரை:

வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்-19ம் தேதி:

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement