ரேஷன் ஊழியர் 'சஸ்பெண்ட்'

திருப்பூர்; தாராபுரம், சின்னக்காம்பாளையம் ரேஷன் கடை, சரியான நேரத்தில் திறக்கப்படுவதில்லை; ரேஷன் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என தொடர் புகார் எழுந்தது.

குறிப்பிட்ட ரேஷன் கடையில் இருந்து, டூவீலர் மற்றும் சரக்கு வாகனம் வாயிலாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்ற புகாரை முன் வைத்து, சில வீடியோவும் வைரலானது.அதனடிப்படையில், கலெக்டர் விசாரணை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, கடை விற்பனையாளர் செல்வராணியை சஸ் பெண்ட் செய்து, கூட்டுறவு துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அக்கடைக்கு காளியம்மாள் என்பவரை நியமித்துள்ளார்.

Advertisement