வரி கொடா இயக்கம் நடத்த வணிகர் சங்கத்தினர் முடிவு
அவிநாசி ; அவிநாசி, சேவூர் ரோடு, சூளை முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாக அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டல் அரங்கில் நடந்த கூட்டத்தில், அனைத்து வணிகர் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஜெகதீஷ்குமரன், ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மனோகரன், கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சாலையோர கடைகளை முறைப்படுத்த தவறிய பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரி கொடா இயக்கம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் எதுவும் செலுத்து வது இல்லை எனவும், மேலும் கடையடைப்பு, உண்ணாவிரதம் என தொடர்ந்து போராட்டம் நடத்துவது என நிறைவேற்றப்பட்டது.
சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் உறுதியளித்த தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர் உள்ளிட்டோருக்கும், மாவட்ட நிர்வாகம்மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கும் போராட்டம் குறித்த கோரிக்கை மனுவை கடிதம் மூலம் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.