கோவிலம்பாக்கம்-வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு

கோவிலம்பாக்கம், பரங்கிமலை - மேடவாக்கம் பிரதான சாலையில், மெட்ரோ ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மேடவாக்கம் - ஆலந்துார் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் பெரும்பகுதி, போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோவிலம்பாக்கம் - - வடக்குப்பட்டு இடையே உள்ள சாலை, படுமோசமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால், சாலை எது, பள்ளம் எது என தெரியாமல், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சாலையின் இருபுறமும், ஆக்கிரமிப்புகளால் குறுகி காணப்படுகிறது.

சீரான போக்குவரத்திற்கேற்ப, வடக்குப்பட்டு -- கோவிலம்பாக்கம் இடையே, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்திற்கு ஏதுவாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement