கருப்பணசுவாமி கோயில் தெருவில் எப்போதான் ரோடு போடுவீங்க...
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி அனைத்து தெருக்களிலும் ரோடு அமைக்கும் பணிநடக்கிறது. தெருக்களிலும் தார் ரோடு, பேவர்கல் தளங்கள் பதிக்கப்படுகிறது. ரோடு பணிக்காக பழைய ரோட்டை பெயர்த்துள்ளனர்.
இது போன்ற பகுதிகளில் உடனுக்குடன் ரோடு அமைக்கப்படாமல் நீண்ட நாட்கள் அல்லது மாதக் கணக்கில் பணிகள் நடக்காத நிலை உள்ளது. இதேபோல் கருப்பணசாமி கோயில் தெருவில் தீபாவளிக்கு முன் ரோடு கிளறப்ப்பட்டது.
தொடர்ந்து தீபாவளி விடுமுறை உட்பட தற்போது வரை 20 நாட்களாகியும் ரோடு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் உட்பட அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள், சிறுவர்கள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் ரோடு அமைக்கும் பணியை உடனுக்குடன் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement