கஞ்சா கை மாற்றும் இடமானது டாஸ்மாக்

மாவட்டம் முழுவதுமுள்ள கஞ்சா வியாபாரிகள் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்று லாபம் அடைந்து வருகின்றனர்.

வேப்பூர் தாலுகாவில், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பலரை கைது செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

வேப்பூர் பகுதி கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள், தீபாவளி பண்டிகையின் போது பல லட்சம் ரூபாய் லாபம் பார்த்தனர்.

மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு, கஞ்சாவை தடையின்றி வழங்கினர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க கஞ்சாவை கை மாற்றும் இடமாக 'டாஸ்மாக்'யை பயன்படுத்தியுள்ளனர். தீபாவளியின் போது கஞ்சா குடித்தவர்களால், பெற்றோர்கள், கிராம மக்கள் கடும் மன உளைச்சல் அடைந்தனர். கஞ்சா விற்கும் கும்பலை வலை வீசி போலீசார் கைது செய்தும் தடுக்க முடியாததால் விழி பிதுங்கி வருகின்றனர்.

Advertisement