ஓய்வுக்குப் பின்னும் கல்லா கட்டும் எஸ்.ஐ.,

கடலுார் மாவட்டத்தில், பணியாற்றி ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஒருவர், ஓய்வுக்குப்பின்னும் கட்டப்பஞ்சாயத்தில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். உட்பகுதி கிராமங்களுக்கு செல்லும் போது காக்கி பேன்ட்டுடன் மப்டியில் வந்த போலீஸ் போல வழக்குகளை விசாரணைசெய்து கல்லா கட்டி வருகிறார். உள்ளூர் போலீஸ் நிலையங்களில் உள்ள ஒரு சிலருடன் கூட்டு சேர்ந்து இதை அரங்கேற்றி வருகிறார்.

ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டரை பற்றி மேலிடத்தில் சொன்னால் நம் மீது ஏதாவது பெட்டிஷன் போட்டு விடுவாரோ என்ற அச்சத்தில், சில போலீசார் தெரிந்தும், தெரியாத மாதிரி நழுவி விடுகின்றனர்.

Advertisement