அனுமதியின்றி மனநல காப்பகங்கள் செயல்பட்டால் நடவடிக்கை: கலெக்டர்

கடலுார்: அனுமதியின்றி செயல்படும் மனநல காப்பகங்கள், போதை மறுவாழ்வு மையங்கள், மனநல புகலிடங்கள், முதியோர் இல்லங்கங்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

சென்னை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளரின் கடிதத்தின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல காப்பகங்கள். போதை மறுவாழ்வு மையங்கள், மனநல புகலிடங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவை அரசிடம் முறையான பதிவு பெற வேண்டும். அனுமதியின்றி நடத்தப்படுவது சட்ட விரோதமானது.

அவ்வாறு சட்ட விரோதமாக செயல்படும் மையங்கள் குறித்து புகார் மற்றும் கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டால் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement