திருமணத்திற்கு காதலன் மறுப்பு காதலி தற்கொலை
விருத்தாசலம்,: காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், மனமுடைந்த காதலி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண். இவர் திட்டக்குடி அரசு கல்லுாரியில் படிக்கும் போது, அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த காட்டாத்துார் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். அதற்கு அவர் மறுத்தார்.
இதில் மனமுடைந்த அப்பெண் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement