வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், இம்மாத பயிற்சி வகுப்புகள் குறித்து வெளியிட்டுள்ளார்.
அதில், நேற்று மர சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து அறிவியல் நிலையத்தில் பயிற்சி வகுப்பு நடந்தது.
நாளை கொண்டாசமுத்திரத்தில் வேர்க்கடலையில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், 8ம் தேதி அறிவியல் நிலைய வளாகத்தில் இயற்கை விவசாயம், 9ம் தேதி சிறுதானியங்களில் ரகங்கள் மற்றும் பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி நடக்கிறது.
12ம் தேதி வேப்பூர் அடுத்த இளங்கியனுாரில் சிறுதானியங்களில் ரகங்கள் மற்றும் பயிர் மேலாண்மை, அன்று அறிவியல் நிலையத்தில் நெல்லிக்காயில் மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி நடக்கிறது.
13ம் தேதி எடங்கொண்டான்பட்டு கிராமத்தில் வேர்க்கடலையில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி நடக்கிறது.
14ம் தேதி அறிவியல் நிலையத்தில் வேர்க்கடலையில் ஒருங்கிணைந்த நுண்ணுாட்டச்சத்து மேலாண்மை, அன்று குமராட்சியில் உளுந்து பயிரில் கஸ்கியூட்டா மேலாண்மை மற்றும் 15ம் தேதி சின்னகொமட்டியில் வேர்க்கடலையில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி நடக்கிறது.
15ம் தேதி சிறுபாக்கத்தில் மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் தரும் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள், 18ம் தேதி வடமூரில் உளுந்து பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், 20ம் தேதி ஆதிவராகநல்லுாரில் உளுந்து பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி நடக்கிறது.
22ம் தேதி காடாம்புலியூரில் முந்திரி சாகுபடி மற்றும் பராமரிப்பு மற்றும் முந்திரி பழத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடக்கிறது. 25ம் தேதி அண்ணாகிராமத்தில் கரும்பு பயிரில் மருதாம்பு மேலாண்மை, ஆலிச்சிகுடியில் காட்டுப்பன்றி மேலாண்மை பயிற்சிகள்நடக்கிறது.
விவசாயிகள் பயிற்சிகளில் பங்கேற்று பயனடையலாம்.