ஈரான் ரியால் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வரலாற்றில் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு, இன்று 7,03,000 ஆக சரிந்தது.

ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்கா டாலருக்கு நிகராக ஈரானின் ரியால் மதிப்பு 32,000 மாக சரிந்து இருந்தது. ரியால் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்ததால், பொருளாதாரம் தள்ளாடியது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதால், ஈரானின் ரியால் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டிருக்கிறது.


ஈரான் அரசு செய்தித் தொடர்பாளர் பதேமே மொஹஜெரானி கூறுகையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அமெரிக்கா மற்றும் ஈரானின் கொள்கைகள் வெவ்வேறானவை. அதிபர் மாறுவதால் அவை பெரிதாக மாறாது. நாங்கள் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்துள்ளோம். இவ்வாறு மொஹஜெரானி கூறினார்.

Advertisement