சிட்னி கேப்டன் வார்னர்
சிட்னி: சிட்னி அணிக்கு வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணி முன்னாள் துவக்க வீரர் டேவிட் வார்னர் 38. கடந்த 2018ல் தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த கேப்டவுன் டெஸ்டில் பந்தை சுரண்டிய சர்ச்சையில் சிக்கினார். அப்போது, எந்த அணிக்கும் கேப்டனாக செயல்படக் கூடாது என வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஐ.பி.எல்., உட்பட பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்ளூர் தொடர்களில் கேப்டனாக செயல்பட்டார்.
இதனிடையே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், தன் மீதான தடையை நீக்குமாறும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிடம் (சி.ஏ.,) சமீபத்தில் முறையிட்டார். இதனால், வார்னர் தடை விலக்கப்பட்டது.
தற்போது, 6 ஆண்டுக்குப் பின், ஆஸ்திரேலிய மண்ணில் கேப்டனாக களமிறங்க உள்ளார் வார்னர். இங்கு நடக்கும் பிக் பாஷ் தொடரில் பங்கேற்கும் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு இவர், கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.