அப்பாடா...! தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1320 சரிவு!

2

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1320 சரிந்துள்ளது. ஒரு கிராம் ரூ.7,200க்கும், ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்பனை ஆகிறது.


தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஆபரணத் தங்கத்தில் விலையில் புதிய மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன் இல்லாத அளவு, தங்கத்தின் விலை ஏறியதால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பண்டிகை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருந்ததாக தங்க நகை வியாபாரிகள் கூறினர்.

தீபாவளி முடிந்துவிட்ட நிலையில் 3 நாட்கள் கழித்து, நவ.,05ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. ஒரு சவரன் ரூ.58,840க்கும், ஒரு கிராம் ரூ.7,355க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (நவ.,06) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில், இன்று (நவ.,07) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து ரூ.57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,200க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1320 சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


வெள்ளி விலை என்ன?



ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து, ரூ.102க்கு விற்பனை ஆகிறது. அக்.26ம் தேதி முதல் நவ.,6ம் தேதி வரை இருந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலையை இப்போது பார்க்கலாம்:

அக்.26 - ரூ.58,880


அக்.27 - ரூ.58,880


அக்.28 - ரூ.58,520


அக்.29 - ரூ.59,000


அக்.30 - ரூ.59,520


அக்.31 - ரூ.59,640


நவ.1 - ரூ.59,080


நவ.2 - ரூ.58,960


நவ.3 - ரூ.58, 960


நவ.4 - ரூ.58,960


நவ.5 - ரூ.58,840


நவ.6 - ரூ.58,920

Advertisement