பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்து பாலத்தின் நடுவில் துாக்கு பாலம் பொருத்தப்பட்டு பலகட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடந்தன. தொடர்ந்து பாலத்தை நவ.13, 14ல் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய உள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தண்டவாள அதிர்வுகளை கண்டறிய 3 பெட்டிகளுடன் 90 கி.மீ., வேகத்தில் புறப்பட்ட ரயில் பாம்பன் பாலத்திலும் அதே வேகத்தில் கடந்து ராமேஸ்வரம் வந்தது.

மீண்டும் மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் சென்றது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement