கர்ப்பமாக்கிய போலீஸ் மீது கலெக்டரிடம் பெண் புகார்

திருச்சி:புதுக்கோட்டை மாவட்டம், தெம்மாவூரை சேர்ந்த பொற்செல்வி என்ற நர்சிங் மாணவிக்கும், களமாவூரைச் சேர்ந்த, திருச்சி ஆயுதப்படை போலீஸ்காரர் பாலமுருகனுக்கும், 2023ம் ஆண்டு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.

நர்சிங் படிப்பை முடித்த மாணவி, திருச்சியில், தனியார் மருத்துவமனையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

அப்போது, திருச்சி ஆயுதப்படையில், பயிற்சியில் இருந்த பாலமுருகன், தன் அறைக்கு நர்சை வரவழைத்து, அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் நர்ஸ் கர்ப்பம் அடைந்தார். பின் கட்டாயப்படுத்தி, கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து, கருவை பாலமுருகன் கலைத்ததாகக் கூறப்படுகிறது.

பின், நிச்சயம் செய்தபடி, நர்சை திருமணம் செய்ய போலீஸ்காரர் மறுத்து விட்டார். அதிர்ச்சி அடைந்த நர்ஸ், போலீசில் புகார் அளித்தார்.

புகாரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

'பாலமுருகன் போலீஸ்காரர் என்பதால், அவருக்கு ஆதரவாக மகளிர் போலீசார் நடந்து கொள்கின்றனர். அவர் வேறு திருமணம் செய்ய உதவி செய்கின்றனர்' என நர்ஸ், நேற்று முன்தினம் இரவு, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Advertisement