குமுதா பள்ளி மாணவர் தேர்வு
திருப்பூர் ; இந்திய பள்ளிகள் விளையாட்டுக்குழுமம் நடத்திய 17 வயதுக்குட்பட்டோருக்கான கையுந்து பந்து போட்டிக்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு கரூரில் நடந்தது. இதில் பங்கேற்ற குமுதா பள்ளி 11ம் வகுப்பு மாணவர் முஹம்மது ரபீக் தமிழக அணிக்காக தேர்வானார். கடந்த 6ம் தேதி துவங்கி வரும் 10ம் தேதி வரை உ.பி., மாநிலம் பெராலி நகரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாடி வருகிறார். பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச்செயலாளர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர், மாணவனை வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement