எஸ்.பி., அலுவலகத்தில் கோவை சரக ஆய்வு கூட்டம்

கோவை ; கோவை சரக போலீசாருக்கான சரக ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.

கோவை சரகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கண்டறியவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உண்டான வழிமுறைகள், சைபர் கிரைம் நடவடிக்கைகள், சாலை விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 40 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆய்வு கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார், மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், ஈரோடு எஸ்.பி., ஜவகர், திருப்பூர் எஸ்.பி., அபிஷேக்குப்தா, நீலகிரி எஸ்.பி., நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement