பாரதிதாசன் கல்லுாரியில் பயிலரங்கம் நிறைவு விழா

புதுச்சேரி: கணினி தமிழ் பேரவையின் இரண்டு நாள் பயில ரங்கம் நிறைவு விழா நடந்தது.

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி தமிழ்த் துறை கணித்தமிழ்பேரவை சார்பில் இருநாள் கருத்தரங்கம் நேற்றுமுன்தினம் துவங்கியது.

இரண்டாம் நாள் முதல் அமர்வில், கணினி, தமிழ் தட்டச்சு எனும் தலைப்பில் பேராசியர் குப்புசாமி பேசினார். முனைவர் வஜ்ரவேலு நெறியாளுகை செய்தார்.

இரண்டாம் அமர்வு பேராசியர் சந்திரா தலைமையில் நடந்தது. இதில் பேராசியர் பட்டம்மாள் தொழில்நுட்ப உலகில் மகளிர் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி னார்.

பின் நிறைவு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி பல்கலைக்கழக தமிழியல் புல முதன்மையர் சுடலைமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழ்த் துறை தலைவர் சேதுபதி கணினி தமிழ் போக்குகள் குறித்து எடுத்துரைத்தார், மாணவி நிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாணவி ஜெயசூர்யா நன்றி கூறினார்.

Advertisement