அரசு மகளிர் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்: விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி இளவரசன் தலைமை தாங்கி, போதை என்றால் என்ன, இதனால் பாதிக்கப்படும் நபர்கள், ஏற்படும் பிரச்னைகள் குறித்து கூறினார். மாணவிகள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
படிக்கும் வயதில் பயின்ற முன்னேற வேண்டும். பெற்றோரை பார்த்து கொள்ளும் பொறுப்பு மட்டுமின்றி இந்த சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி இளவரசன் பதில் அளித்தார்.
நிகழ்ச்சியில், மகளிர் கல்லுாரி முதல்வர் தாமோதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயச்சந்திரன் உட்பட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement