தேசிய தன்னார்வ ரத்ததான தினம்
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான தினம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கினார்.
மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். ரத்த வங்கி துறை தலைவர் நித்யா வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் முகாம் ஏற்பாட்டாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி ரத்ததானம் முக்கியவத்தவம் குறித்து பேசினார்.
கல்லுாரி துணை முதல்வர் தரணி, துறைத்தலைவர் சத்யலட்சுமி, மாவட்டதிட்ட மேலாளர்கள் விவேகானந்தன், கவிதா, சமூக பணி ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement