ரங்கபூபதி கல்லுாரி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம், பி.எட்., எம்.எட்., டிப்ளமோ நர்சிங், ஏ.என்.எம்., நர்சிங் ஆகிய பிரிவு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.

கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். டாக்டர் ஆத்மலிங்கம் முன்னிலை வகித்தார். பி.எட்., கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.

பேராசிரியர் சுகிசிவம் பேசுகையில், 'ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை அன்றே படித்து விட்டால் எளிதாக படித்து விடலாம். என்ன படிக்கிறோமே அதை முழுமையாக புரிந்து படிக்க வேண்டும்' என்றார்.

கல்லுாரி முதல்வர்கள் எம்.எட்., கல்லுாரி சசிகுமார், பார்மசி ராஜேஷ், நர்சிங் ஜெயலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எம்.எட்., கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், பெற்றோர், முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement