சுகாதாரத் துறை இயக்குனர் ஆய்வு

உளுந்துார்பேட்டை: களமருதுார், திருநாவலுார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பருவ கால மாற்றங்களால் நோய் பரவுவதைத் தடுக்க நடந்து வரும் சிறப்பு முகாம்களையும் ஆய்வு செய்தார். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ராஜா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement