பாதையில் குழி விபத்துக்கு வழி
திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோட்டில் சாலையில் ஏற்பட்டுள்ள குழியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர், காலேஜ் ரோடு, திரு.வி.க., நகர் லே அவுட் பகுதியில், சாலையில் உள்ள சாக்கடை பாலத்தில் குழி ஏற்பட்டிருக்கிறது. இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், சற்று கவனக்குறைவுடன் வாகனங்களை செலுத்தினாலும், குழிக்குள் தடுமாறி விழும் சூழ்நிலையுள்ளது. 'சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement