'ஆரம்பத்தில் கண்டறிந்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்'
திருப்பூர் ; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டுநலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், சார்பில், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி, கருத்தரங்கம் கல்லுாரியில் நடந்தது. என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜனனி பேசுகையில்,'' புற்றுநோய் மரபணு மாற்றத்தின் மூலமாகவும், உணவுப்பழக்கம், சுத்தம், சுகாதாரம் சரியாக இல்லாத காரணத்தாலும் பரவ வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதாக, குணப்படுத்த முடியும். அனைவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வாக இருந்தால் புற்றுநோய் வருவதை தவிர்க்க முடியும்,'' என்றார்.
' இதய பூர்வமாக புற்றுநோயை எதிர்த்து போராடுங்கள்', எனும் தலைப்பில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.