40 பனைமரங்களை வெட்டியவர் கைது

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி பூஞ்சோலை நகர் பகுதியில் ஓடைக்கு செல்லும் சாலை உள்ளது.

இங்கு, சாலையோரத்தில் இருந்த, 80 ஆண்டு கள் பழமையான, 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பொக்லைன், இயந்திரத்தின் உதவியுடன் கடந்த மாதம் 10ம் தேதி வெட்டி சாய்க்கப்பட்டது.

இதுகுறித்து பகுதிவாசிகள் சின்னம்மாபேட்டை வி.ஏ.ஓ., இளங்கோவிடம் புகார் அளித்தனர். விசாரணையில் பனை மரங்களைவெட்டியவர் அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்,49 என்பது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 16ம் தேதி திருவாலங்காடு காவல் நிலையத்தில் பனை மரங்களை வெட்டிய ஆறுமுகத்தின் மீது வி.ஏ.ஓ., புகார்அளித்தார்.

வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் ஆறுமுகத்தை தேடி வந்த நிலையில் நேற்று காலை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் குன்னலூர்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத்தலைவரின் கணவரானபூமிநாதன் என்பவர், ஹிந்து அறநிலைத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் வளர்ந்த பனை மரங்களை வெட்டினார்.

இது தொடர்பாக வி.ஏ.ஓ., அளித்த புகாரின்படி எடையூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

தமிழகத்தில் முதல்முறையாக பனை மரத்தை வெட்டிய குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின் திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கேஇரண்டாவதாகும்.

Advertisement