சின்னச்சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை

கடமலைக்குண்டு : மேகமலை சின்னச்சுருளி அருவியில் தொடரும் நீர் வரத்தால் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்கிறது.

கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியம் அருகே உள்ளது மேகமலை சின்னச் சுருளி அருவி. கடந்த சில வாரங்களாக வனப்பகுதியில் அடுத்தடுத்து பெய்யும் மழையால் அருவியில் நீர் வரத்து தொடர்கிறது. ஆண்டிபட்டி சார்ந்துள்ள பகுதிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சின்னச் சுருளி அருவியில் குளிப்பதற்காக வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவியில் கூடுதலான நீர் வரத்து இருந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை. வனத்துறையினர் அருவிக்கு வரும் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு ஆகிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Advertisement