புதுச்சேரி-பெங்களூரு விமான சேவை டிச. 20ம் தேதி மீண்டும் துவக்கம்
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து வரும் டிச. 20ம் தேதி முதல் பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கு மீண்டும் விமான சேவை துவங்குகிறது.
புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஐதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த மார்ச் 30ம் தேதியுடன் நிறுத்தியது. இந்நிலையில் மீண்டும் விமான சேவையை துவுங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்து வரும் 20ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு ஏ.டி.ஆர்.,- 72 ரக விமான சேவையை வரும் டிசம்பர் 20ம் தேதி துவங்குகிறது. இச்சேவை வாரம் முழுக்க இருக்கும்.
பெங்களூரில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25க்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். ைஹதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும்.
பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு மாலை 6.35 சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.