தே.மு.தி.க., தொழிற்சங்க பேரவை ஆலோசனை

மந்தாரக்குப்பம் : தே.மு.தி.க., தொழிற்சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் பெரியாக்குறிச்சியில் நடந்தது.

வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத், மாவட்ட தொழிற்சங்க தலைவர் தெய்வீகதாஸ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மகேஷ். தொழிற்சங்க துணை தலைவர்கள் சுரேஷ்குமார், வெங்கடேசபெருமாள், செல்வம் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க பேரவை தலைவர் தங்க மாயவேல் வரவற்றோர்.

மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், துணைத் தலைவர் சக்திவேல், மாநில போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் என்.எல்.சி., சொசைட்டியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தர செய்ய வேண்டும். குறைந்த பட்சம் ஊதியம் ரூ. 50,000 வழங்க வேண்டும். என்.எல்.சி., மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவ கல்லுாரியுடன் இணைந்த மருத்துவமனையாக மாற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவைத்தலைவர்கள் பாலு, இராஜராம், பொருளாளர்கள் தென்னவன், ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொழிற்சங்க செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Advertisement