பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் விஷ ஜந்துக்கள்
பூந்தமல்லி:பூந்தமல்லி, கரையான்சாவடியில் 1931ம் ஆண்டு முதல் பார்வையற்றோர் பள்ளி இயங்குகிறது. தற்போது, தமிழக மாற்றுத்திறனாளிகள் துறை கட்டுப்பாட்டில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியும், பார்வையற்றோர் மறுவாழ்வு இல்லமும் அமைந்துள்ளன.
இங்கு 120க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் பின்புறம் செடிகள் அதிகம் வளர்ந்து, புதர் மண்டியுள்ளது.
இதனால் மாணவர்கள் விடுதி, பள்ளி வளாகத்தில், அடிக்கடி விஷ ஜந்துக்கள் வருவதால், அச்சமடைகின்றனர். எனவே, இந்த பள்ளி வளாகத்தில் உள்ள புதரை அகற்றி, வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement