சானிடைசருக்கு 18 சதவீதம் வ।ரியை ரத்து செய்தது நீதிமன்றம்
மும்பை:கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் சானிடைசரை 'கிருமி நீக்கி' என்ற பிரிவில் சேர்த்த மத்திய அரசின் முடிவை, மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
சானிடைசர் ஒரு 'கிருமி நீக்கி' என்று 2020ம் ஆண்டில் செய்திக் குறிப்பு வெளியிட்ட அரசு, அதை 18 சதவீத ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தது.
மும்பையைச் சேர்ந்த சானிடைசர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு, 2023ல் ஜி.எஸ்.டி., இயக்குனரகம் அனுப்பிய நோட்டீசில், 18 சதவீத வரி விதிப்புக்கு பிந்தைய நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்த உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில், மும்பையைச் சேர்ந்த, இந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்கள், ஆன்ட்டிசெப்டிக் திரவங்கள், மருத்துவப் பொருள் பட்டியலில் வருவதால், அவற்றுக்கு ஜி.எஸ்.டி., குறைவு என்றும், ஆனால், சானிடைசரை கிருமி நீக்கி பிரிவில் அரசு சேர்த்தது தவறு என்றும் வாதிடப்பட்டது.
மேலும், 18 சதவீத ஜி.எஸ்.டி., பிரிவில் இருந்து அதை நீக்கவும், மத்திய நிதி அமைச்சக செய்திக் குறிப்பு மற்றும் தங்கள் நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அதை ஏற்ற உயர் நீதிமன்றம், சானிடைசரை கிருமி நீக்கி பிரிவில் சேர்த்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. ஆனால், தனியார் நிறுவனத்துக்கு, ஜி.எஸ்.டி., இயக்குனரகம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், உரிய தீர்ப்பாயத்தில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர்.