உச்சத்தில் 'பிட்காய்ன்' விலை 90,000 டாலரை நெருங்கியது டிரம்ப் வெற்றியால் சந்தையில் உற்சாகம்

லண்டன்:'கிரிப்டோ கரன்சி' எனும் மெய்நிகர் நாணய வணிகத்தில், 'பிட்காய்ன்' விலை, 90,000 டாலரைத் தொட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி வணிக உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5ம் தேதி, ஒரு பிட்காய்ன் விலை 75,000 டாலர் என குறைவான விலையில் வர்த்தகமான சூழலில், அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து, தினமும் விலை அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற வணிகத்தில், 88,700 டாலராக இருந்த பிட்காய்ன் விலை, நேற்றைய வணிகத்தில் 10 சதவீதம் அதிகரித்து, 89,604 டாலரானது. விரைவில் ஒரு லட்சம் டாலரை தொடும் என, சந்தை நிபுணர்கள் சிலர் கணித்துள்ளனர்.

துவக்கத்தில் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த டிரம்ப், பின்னர், தேர்தல் நெருங்கிய நிலையில், அதற்கு ஆதரவாகப் பேசத் துவங்கினார். ஒருகட்டத்தில், உலகின் கிரிப்டோ தலைநகராக அமெரிக்காவை மாற்றப் போவதாக கூறியதுடன், தனது பரப்புரைக்கு, கிரிப்டோ கரன்சி வாயிலாக நன்கொடையும் பெற்றார்.

'வேர்ல்டு லிபர்டி பைனான்சியல்' என்ற பெயரில், கிரிப்டோ கரன்சி வணிக நிறுவனத்தைத் துவங்கிய டொனால்டு டிரம்ப், அதில் தனது குடும்பத்தினரையும் ஈடுபடுத்தினார். இதையடுத்து, டிரம்ப் அதிபராவது உறுதியானதும், கிரிப்டோ கரன்சி வணிகத்தில் பெரும் உற்சாகம் நிலவி வருகிறது.

கிரிப்டோ கரன்சி வணிகத்தில் முன்னிலை வகிக்கும் பிட்காய்ன் விலை, இந்த ஆண்டில் இதுவரை 77 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. இதில் பெரும்பகுதி, இந்த வணிகத்துக்கு டிரம்ப் ஆதரவளித்தது முதல், நேற்றைய தினம் வரை கண்ட உயர்வாகும்.

கிரிப்டோ வணிகத்துக்கு டிரம்ப் அரசு சட்டப்பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் மாற்றத்தை கொண்டு வரும் என நம்புவதாக, இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.





வெள்ளியை விஞ்சிய பிட்காய்ன்

சந்தை மதிப்பில், உலகின் 8வது மிகப்பெரிய சொத்து என்ற அந்தஸ்தை எட்டி வெள்ளியை பின்னுக்கு தள்ளியது, பிட்காய்ன்வரிசை எண் சந்தை மதிப்பு (ரூ. லட்சம் கோடியில்)1. தங்கம் 1,4732. என்விடியா 2993. ஆப்பிள் 2854. மைக்ரோசாப்ட் 2615. ஆல்பபெட் 1866. அமேசான் 1827. சவுதி அராம்கோ 1528. பிட்காய்ன் 1479. வெள்ளி 14410. மெட்டா 123(அமெரிக்க டாலரில்)

Advertisement