அரசு பள்ளி கழிப்பறை படுமோசம் அணைக்கட்டு மாணவர்கள் அவதி பள்ளி கழிப்பறை மோசம் மாணவர்கள் கடும் அவதி
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த அணைக்கட்டு ஊராட்சியில், அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, ஆறு முதல் பிளஸ் 2 வரை 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ -- மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளில் பீங்கான்கள் மற்றும் குழாய்கள் உடைந்து, மின்விளக்கு வசதி இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால், மாணவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு, நோய் தொற்று பரவும் அபாயநிலையும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பள்ளி கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement