இடிந்து விழும் அபாய நிலையில் வஜ்ஜிராபுரம் நீர்த்தேக்க தொட்டி

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது.

இதில், 15வது வார்டுக்கு உட்பட்ட வஜ்ஜிராபுரம் சாலையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன், மக்களின் குடிநீர் தேவைக்காக, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி, குழாய் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி துாண்களின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உறுதித்தன்மை இழந்துள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டி, 60 அடிக்கும் அதிகமான உயரம் உள்ளது.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தரக்கோரி, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement