மத வன்முறையை தூண்டும் பேச்சு ; ஓவைசிக்கு போலீசார் நோட்டீஸ்
மும்பை: மத வன்முறையை தூண்டும் விதமாக பேசக் கூடாது என்று அகில இந்திய மஜீஸ் இ அல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாரூதின் ஓவைசிக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி சோலாபுரின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் வேட்பாளர் பரூக் ஷப்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அசாரூதின் ஓவைசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், போலீசார் ஓவைசிக்கு நோட்டீஸ் ஒன்றை அளித்தனர். அதில், எந்த மதத்திற்கு எதிராகவும், பிற மதத்தை புண்படுததும் விதமாகவும் பேசக் கூடாது என்று தெரிவித்துக்கப்பட்டுள்ளது.
ஓவைசிக்குபோலீசார் நோட்டீஸ் அளிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே, இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, இதேபோன்று போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
வக்பு வாரியம் விவகாரத்தில் கடந்த சில தினங்களாக ஓவைசி சர்ச்சை கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.