மஹாராஷ்டிரா தேர்தல் : அதிகரிக்கும் சுயேட்சைகள்; ஆட்சி அமைக்க உதவுவார்களா?
மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயேட்சைகள் போட்டியிடுவதால், இவர்களால் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
288 இடங்கள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் நவ.,20ம் தேதி நடக்கிறது. இதில் மஹாவிகாஷ் அகாதி தலைமையில் காங்., தேசியவாத காங்., உத்தவ் சேனா ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், மஹாயுதி தலைமையில் பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே சேனா, அஜித்பவாரின் தேசியவாத காங். ஆகிய கட்சிகள் களம் இறங்கியுள்ளன.
இரு முனைப்போட்டி நிலவும் சூழ்நிலையில், இம்முறை 2,086 சுயேட்சைகள் வேட்பு மனு செய்துள்ளனர். ஒரு வேளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக சுயேட்சைகள் இருப்பார்கள் எனவும், இவர்களின் தயவால் ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும். என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். .