டில்லி மாநகராட்சி மேயராக ஆம்ஆத்மி கவுன்சிலர் மகேஷ் குமார் கின்சி தேர்வு
புதுடில்லி: டில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் மகேஷ்குமார் கின்சி தேர்வு செய்யப்பட்டார்.
டில்லியில் மூன்றாக இருந்த மாநகராட்சிகள் , ஒன்றாக இணைக்கப்பட்டு டில்லி மாநகராட்சியாக ஒருங்கிணைக்கப்பட்டது.
கடந்த 2023 டிசம்பரில் நடந்த தேர்தலில் மேயர், துணை மேயரை தேர்வு செய்வதில் ஆம்ஆத்மி, பா.ஜ.,இடையே ஏற்பட்ட மோதலால் மேயர் தேர்வு செய்யப்படவில்லை. தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் மகேஷ் கின்சி இன்று (14.11.2024) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக 133 ஓட்டுகளும், பா.ஜ., கூட்டணிக்கு 130 ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து பெரும்பான்மை பெற்ற ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் மகேஷ் குமார் கின்சி மேயராக தேர்வு பெற்றார்.பல மாதங்களாக நீடித்து வந்த மேயர் பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்தது.