மல்லிகை ரூ.1700க்கு விற்பனை
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வரத்து குறைவால் மல்லிகை பூ கிலோ விற்கு ரூ.1700க்கு விற்பனையானது.
அருப்புக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் பூக்கள் விவசாயம் பாரம்பரியமாக நடக்கிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை கூடி இருந்த நிலையில், தற்போது பூக்களின் வரத்து குறைவாலும் விலை குறைவதாக இல்லை. நேற்று அருப்புக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகை பூ 1, 700 க்கும், கனகாம்பரம் 1000, பிச்சி 900, முல்லை 700, ரோஜா 250, சம்பங்கி 200, செவ்வந்தி 200 க்கும் விற்றது.
பூக்கள் வரத்து குறைவாக இருப்பதால் விலை உச்சத்தில் உள்ளது. ஜனவரி மாதம் கடைசி வரையில் இதே நிலைமைதான் இருக்கும் என பூ வியாபாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement