சென்னை மருத்துவருக்கு கத்திக்குத்து அரசு டாக்டர்கள் கண்டன போராட்டம்
விருதுநகர்: சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு அரசு மருத்துவனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவர் சங்கத்தினர் டாக்டர் தனபால் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டாக்டர்கள் கணேஷ், ஜெயராமன், ஆரோக்கிய ரூபன் ராஜ், செல்லத்தாய், ரத்தினம், கோபி ஸ்ரீ உள்பட பலர் பங்கேற்றனர்.
நோயாளிகள் பாதிப்பு
சிவகாசி, காரியாப்பட்டி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.