252 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் காணாமல் போன மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 46 லட்சம் மதிப்புள்ள 252 மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பங்கேற்று மொபைல் போன்களை ஒப்படைத்தார்.

எஸ்.பி., கார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாவட்டத்தில் இந்தாண்டு மட்டும் சுமார் 758 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொபைல் போன்கள் மக்களின் அத்தியாவசியத்தில் ஒன்றாக மாறிவிட்டது. மேலும், மொபைல் போன்கள் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. கவனக் குறைவு காரணமாக தொலைத்து விடுவது வழக்கமாக உள்ளது. மேலும், சிலரிடம் திருடப்படுகிறது. இதனால், மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், மொபைல் போன் காணாமல் போனால் கண்டுபிக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள சி.இ.ஐ.ஆர்., (www.ceir.gov.in) என்ற இணைய தளத்தில் தகவல்களை பதிவு செய்து கொள்வது அவசியம்,'' என்றார்.

Advertisement