காச்சிகுடா - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்

கோவை : சபரிமலை பக்தர்களின் வசதிக்காக காச்சிகுடா - கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, காச்சிகுடா - கோட்டயம்(07133) வாராந்திர சிறப்பு ரயில், காச்சிகுடாவில், இருந்து, 21 மற்றும் 28ம் தேதி மாலை, 3:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை, 6:50 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

வரும், 19ம் தேதி முதல், ஜன., 14ம் தேதி வரை செவ்வாய் கிழமைகளில், சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், கோட்டயம் - காச்சிகுடா(07134) வாராந்திர சிறப்பு ரயில், கோட்டயத்தில் இருந்து, இன்று, 22, மற்றும், 29 ம் தேதி இரவு, 8:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு, 11:40 மணிக்கு காச்சிகுடா சென்றடையும்.

இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியாக செல்லும். காச்சிகுடா - கோட்டயம் சிறப்பு ரயில், கோவைக்கு காலை, 11:45 மணிக்கு வரும்.

கோட்டயம் - காச்சிகுடா சிறப்பு ரயில் கோவைக்கு அதிகாலை 3:02 மணிக்கு வந்து செல்லும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement