நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருத்தேர்வலை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு ரூ.16.46 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் 150 முன்னேற்பு மனுக்கள் பெறப்பட்டு அதில் 102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற முகாமில் 115 மனுக்கள் பெறப்பட்டு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் பொருளாதார மேம்பாட்டு சுழல் நிதி, கடன் உதவி திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடமாடும் மருத்துவ வாகன சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து பயனடைய வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார். 3 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 23 பேருக்கு பட்டா மாறுதல், 6 பேருக்கு புதிய ரேஷன் கார்டு, கூட்டுறவுத் துறை மூலம் 62 பேருக்கு மகளிர் சுய உதவிக் கடன் 15 லட்சம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜ மனோகரன், யூனியன் தலைவர் ராதிகா, துணைத் தலைவர் சேகர், தாசில்தார் பொறுப்பு கார்த்திகேயன், பி.டி.ஓ., மலை ராஜ், ஊராட்சி தலைவர் செந்தாமரை கலந்து கொண்டனர்.

Advertisement