பெரிய மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை அருகில், அமைந்துள்ள பெரியமாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத தேர்திருவிழா, கடந்த அக்.,31ல் அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வுடன் தொடங்கியது.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அக்னி கரகம் எடுத்தல், பூ மிதித்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு அம்மன் திருத்தேர் முக்கிய வீதிகளின் வழியாக வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்து வந்தனர். இன்று பூந்தேர் அழைத்தல், நாளை சத்தாபரண உற்சவம், 17 ம்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது. திருவிழா நாட்களில், தினமும் ஒவ்வொரு அமைப்பு சார்பாக அம்மன் திருவீதிஉலா நடந்தது.

Advertisement